NAAC-Accredited 'A++' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

sona-facilities

சோனா தமிழ் இலக்கிய மன்றம்

*அகிலத்தில் ஆதிமொழி
அழகிய தமிழ்மொழியே!!


*வள்ளுவனை கம்பனை
ஈன்றெடுத்த தாய்மொழியே!!

*உணர்வுகளை உயிர்ப்பிக்கும்
உன்னத அமிர்தமே !!

*காலங்களால் அழியாத
கற்பக விருட்சமே!!

*அறியாமையை விரட்டிய
சங்ககால வெளிச்சமே !!

*பாரம்பரிய பண்பாடுகளின்
அதிகார அரியாசனமே !!

உணர்வுகளை உன்னதமாய்
வெளிப்படுத்தும் தமிழுக்கு...

மாணவக் கண்மணிகளால்
படைப்புப் பாமாலைகளை

ஆண்டுதோறும்
அணிவித்து மகிழ்ந்திட

புண்ணிய பூமியான
நம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில், கடந்த 2008 ஆண்டில், தமிழ் இலக்கிய மன்றம் நம் கல்லூரியின் தலைவர் திரு. வள்ளியப்பா ஐயா அவர்களால் தொடங்கபட்டது.

தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பாக கைவண்ணங்களில் கோலங்கள் ஓவியங்கள், அற்புதமாக படைக்கப்பட்ட கவிதைகள், கட்டுரைகள், நாட்டியங்கள், சங்கீத நிகழ்வுகள், பட்டிமன்றங்கள், பொங்கல் விழாக்கள், பேச்சுப்போட்டிகள் என பல போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

கலை உதயம் , கலைவிழா போன்ற தரணி போற்றும் பல தமிழ் திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு , அவ்விழாவி்ற்கு உலகின் தலைசிறந்த பல தமிழ் அறிஞர் பெருமக்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு , அவர்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்கம், பட்டிமன்றம் என பல கவிமாலைகளை நம் தமிழ் அன்னைக்கு அணிவிக்கும் மகத்தான பணியினை செய்வதில் சோனா தமிழ் இலக்கிய மன்றம் பெருமை கொள்கிறது.

நிகழ்வுகள் :
கலைவிழா- 2024

சோனா தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக கலைவிழா- 2024 நிகழ்வானது 2024 ஆம் ஆண்டு பங்குனி 30, ஏப்ரல் 12 மேலும்...

பொங்கல் விழா-2024

சோனா தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக தமிழர் சமுகம் சங்கமிக்கும் திருநாளாம் பொங்கல் விழா- 2024 - மேலும்...

கலை உதயம்- 2022

சோனா தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக 2023 ஆம் ஆண்டு ,ஜூலை 19 ,ஆடி 03 அன்று நடைபெற்ற சோனா கலை உதயம் 2022 விழா - மேலும்...

கலை விழா – 2023

தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக வருகின்ற 03.05.2023 அன்று நடைபெற இருக்கின்ற கலைவிழா 2023 - மேலும்...

சோனா என்னும் புண்ணிய பூமியில் கால்தடம் பதித்த தமிழ் அறிஞர் பெருமக்கள்

  • “கலைமாமணி” சுகி.சிவம்.
  • முனைவர் கு.ஞானசம்பந்தன், பட்டிமன்ற நடுவர்
  • “நகைச்சுவை நாவலர்” புலவர் மா.இராமலிங்கம்
  • திரு.ராஜா, பட்டிமன்ற பேச்சாளர்.
  • “நகைச்சுவை தென்றல்” பேராசிரியர் மு. இராமச்சந்திரன்.
  • “ஆளப்போறான் தமிழன் புகழ்” விவேக் வேல்முருகன் , பாடலாசிரியர்
  • “செந்தமிழ்ச்சுடர்” கி.சிவகுமார், பட்டிமன்ற பேச்சாளர்
  • திரு. பாரதி கிருஷ்ணகுமார், எழுத்தாளர் & திரைப்பட இயக்குனர்
  • புலவர் ராமன்
  • கவிஞர் நீ.மா.இராஜகோபால்,
  • “தூய தமிழ் பற்றாளர் ” த.தங்கமுத்து,பட்டிமன்ற பேச்சாளர்
  • கவிஞர்.இரா.பூபதி, எழுத்தாளர் & பட்டிமன்ற பேச்சாளர்
  • கவிஞர்.கொளத்தூர் ப.வைரவேல்

தமிழ் இலக்கிய மன்றத்தினால் தமிழின் பெருமையை பறைசாற்றும் விதமாய் நடத்தப்படும் போட்டிகள் :

  • இருமுகம் ஒரு அகம்
  • பேசும் படம்
  • ஆடு புலி
  • கைவண்ண காவியம்
  • டென்ட்கொட்டாய்
  • விடுகதை விளையாட்டு
  • பிரசங்கத்தின் தலைவன்
  • தமிழ்க்கோர்வை
  • ஆட்டம் தமிழ் அமுது
  • திருக்குறளின் திருப்பம்
  • பழமொழி பழகுவோம்
  • நிழலும் நிதர்சனமும்

மன்ற ஒருங்கிணைபாளர்கள்:

  • திரு. மா.சுகுமாரன் , உதவி பேராசிரியர் ,மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை.
  • திரு. முகேஷ் சுந்தரராஜன் , உதவி பேராசிரியர் ,உயிர் மருத்துவ துறை.