NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

தேசிய அளவிலான போட்டிகளில் சோனா எம்.பி.ஏ மாணவர்கள் சாதனை

????????????????????????????????????
MBA students – with Vice Chairman Mr.Thyagu Valliappa , Principal Dr.V.Jayaprakash, Vice Principal Dr.Usha, MBA Director Dr.Selvraj

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் எம்.பி.ஏ துறை மாணவர்கள், தேசிய அளவிலான மேலாண்மைத்துறை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பெங்களுரில் சி.ஐ.ஐ கூட்டமைப்பு நடத்திய ‘தொழில்திட்ட’ போட்டிகளில், ஐ.ஐ.ம் போன்ற மத்திய கல்வி நிறுவனங்களுக்கு இணையாக , சோனா கல்லூரி மாணவர்கள் சக்தி கார்த்தி, நவீன், புருஷோத்தமன் மற்றும் அலிஇப்ராஹீம் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். இப்போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகளில் வென்றதன் மூலம் ரூ.10 லட்சத்திற்கும் மேலாக சோனா மாணவர்களின் தொழில்திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாலர்கள் முனைப்போடிருப்பது சிறப்பிற்குறியது. திருச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான மேலாண்மைத்திறன் போட்டியில், சோனா மாணவர்கள் முதலிடம் பெற்று கோப்பையை வென்றுள்ளனர். எம்.பி.ஏ மாணவர்கள் ஹரி, விஜயப்பிரகாஷ், கார்த்திகேயசிவா, விவேகானந்தன், ராதிகா, அபிராமி, நிவேதா, பூர்ணசுதா, அஸ்வின், அலிஇப்ராஹீம், சபரீஷ்ராஜ் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட நேபாள மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளனர்.

இம்மாணவர்களுக்கான பாராட்டு விழா, சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் சிறப்பாக  நடந்தது. அப்போது, மாணவர்களை கல்லூரியின் துணைத்தலைவர் திரு.தியாகுவள்ளியப்பா, முதல்வர். திரு.ஜெயப்பிரகாஷ், துணை முதல்வர் திருமதி.உஷா, துறைத்தலைவர் திரு.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்நிகழ்வில் பேராசிரியர்கள் திரு.இமானுவேல், திரு.சீனிவாசன் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

MBA students – with Vice Chairman Mr.Thyagu Valliappa , Principal Dr.V.Jayaprakash, Vice Principal Dr.Usha, MBA Director Dr.Selvraj