Date/Time
Date(s) - 01/10/2015
11:00 am - 5:00 pm
Location
PG Auditorium
Categories
சோனா தொழில்நுட்பக் கல்லூரி விழாவில்
சேலம் மாநகரம் சிங்கப்பூருக்கு ஈடாக எழில்மிகு நகரமாக மாறும்
என கண்காணிப்பு பொறியாளர் தகவல்
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் குடிசார் பொறியியல் துறை சார்பில் “CORE 2015” என்னும் பாடவியல் சிறப்பு வகுப்பு நடைபெற்றது. சேலம் மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் திரு.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்களுக்கான பேச்சுபோட்டி, ஒவியம், பேப்பர் போஸ்டர், போட்டோகிராஃபி போன்ற போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பொறியாளர் திரு.பாலசுப்ரமணியம் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். சேலம் மாநகரம் “SMART CITY”யாக மாறும் வரிசையில் இருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்றும் இன்னும் 5 வருடத்தில் தமிழக அரசின் உதவியுடன் சேலம் மாநகரம் சிங்கபூர்க்கு ஈடாக எழில்மிகு நகரமாக மாறும் என்றார். தமிழக அரசினால் 320கோடியில் உருவாகி வரும் தனிக்குடிநீர் திட்டம் மற்றும் 150கோடியில் வேலை நடந்து கொண்டிருக்கும் பாதாள சாக்கடைத் திட்டம் ஆகியவற்றில் தான் கண்காணிப்பு பொறியாளராக இருப்பதாக குறிப்பிட அவர் சேலத்தைச் சேர்ந்த 22 மண்டலங்களில் 135MLD (Million Liters per Day) கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் முடியும் நிலையில் உள்ளது என்றார். மேலும் மாணவர்கள் நேரில் வந்து சேலம் மாநகரில் நடக்கும் பதாளச்சாக்கடை மற்றும் குடிநீர்த்திட்ட வேலைகளை பார்வையிட்டு செயல்முறை விளக்கங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் குடிசார் பொறியியல் துறைத்தலைவர் முனைவர்.மாலதி மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பிரனேஷ், சந்தோஷ்குமார், ஓவியா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.