என்னுடைய கல்லூரி மாணவர்களின் வளர்ச்சியில் நூலகம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களும் மாணவர்களின் திறன்களையும், அறிவாற்றலையும் மேம்படுத்த மிகவும் உதவியது. கல்லூரியில் இருக்கும் அனைத்து துறைகளுக்கான புத்தகங்களும் இருக்கிறது. மேலும் நமக்கு தேவைப்படுகிற புத்தகங்களை சிபாரிசின் பேரிலும் பெற முடியும். நூலகத்தில் கணிணிகளும் உள்ளன. இணையதளம் மூலம் அறிவாற்றலையும் வளர்த்துக்கொள்ள முடிகிறது. நமக்கு தேவையான தகவல்களைத் தேவையான நேரத்தில் நூலகம் மூலம் பெற்றுக் கொள்ள முடிகிறது. தக்க சமயத்தில் உறுதுணையாக இருக்கிறார்கள். நான் சோனா தொழிற்நுட்பக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய வேலை வாய்ப்புக்கான அனைத்து புத்தகங்களும் எங்களுடைய நூலகத்தில் வைத்துள்ளன. மிகவும் உதவியாக இருக்கிறது. என்னுடைய ஆசிரியர்களும் மிகவும் உதவி செய்திருக்கிறார்கள்
—– சோ.சாந்தி,
BE- ECE – ‘D’