NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

Date/Time
Date(s) - 27/08/2025
11:00 am - 12:30 pm

Categories


இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை DST-STI HUB திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தொகுதியில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் முக்கிய நிகழ்வான அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய துவக்க விழா 27.8.25 அன்று சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், செக்காரப்பட்டியில்  நடைபெற்றது.

சோனா தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் திரு. செ. ரா. ரா. செந்தில்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அப்போது இந்த திட்டத்திற்கு இந்திய அரிசின் நிதி ரூ. 2.77 கோடியும், சோனா கல்வி குழுமங்களின் நிறுவனத்தினர் ரூ. 2.23 கோடி வழங்கியும், மொத்தம் 5 கோடி மதிப்பில் ஏற்படுத்தபட்ட இந்த மையம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தொகுதியில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து உதவும் என குறிப்பிட்டார். மேலும் நம் நாட்டின் ஜிடிபி என்று சொல்லக் கூடிய “மொத்த உள்நாட்டு உற்பத்தி” சிறு, குறு தொழில்களை சார்ந்தே உள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால் 2047-லில் $30 ட்ரில்லியன் உயர்வை நம் நாடு அடைய முடியும்.

எனவே, இந்த STI-Hub மூலம் நமது கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தொழில்துறை மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ளும் வகையில் திறமைகளை வளர்த்துக் கொண்டால், நமது நாட்டின் முன்னேற்றப் பாதையில் இது சிறியதாக தோன்றினாலும், மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்று குறிப்பிட்டார்.

sti hub inaugurationsti hub inaugurationsti hub inaugurationsti hub inaugurationsti hub inauguration

இந்த திட்டத்தின் முதன்மை ஆய்வாளரும், சோனா தொழில்நுட்ப கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் தலைவர், டீன் – மாணவர் சேர்க்கை பொறுப்புகளை வகிப்பவருமான முனைவர் திருமதி. பா. சத்யபாமா திட்ட விளக்க உரை ஆற்றினார். அதில் திட்டத்தின் நோக்கங்களாக கீழ் வருவனவற்றை குறிப்பிட்டார்.

  1. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.
  2. இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுதல்.
  3. மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துதல்.
  4. பட்டியல் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.
  5. வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தளத்தினை

ஏற்படுத்தி தருதல்.

  1. புதிய சுய உதவிக்குழுக்களை உருவாக்குதல்.

திட்டத்தின் வாயிலாக கற்றுத்தரப்படும் தொழில்நுட்பங்களைக் குறிப்பிட்டார்

  1. தென்னை நார் உரம் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல்.
  2. சாமந்தி பூவை மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி அதனை சந்தைப்படுத்துதல்.
  3. சிறுதானியத்தை சுத்தப்படுத்துதல்
  4. சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல்.

இந்த திட்டத்தின் பயனாளிகளைக் குறிப்பிட்டார்

  1. விவசாயிகள்
  2. கிராமப்புற பெண்கள்
  3. தொழில் செய்ய விரும்புவோர்
  4. குழுவாக இயங்கும் பெண்கள்
  5. சிறுதானிய வியாபாரிகள்
  6. இளைஞர்கள்

திட்டத்தின் முக்கிய நிகழ்வான அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தை மாண்புமிகு சுற்றுலா துறை அமைச்சர் உயர்திரு. ராஜேந்திரன் ஐயா அவர்கள் துவக்கி வைத்து விழா பேருரை ஆற்றினார். இந்த மையத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார். தமிழக அரசின் கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள், தொழில்முனைவோராக வளர்ச்சி பெறுதலின் அவசியத்தையும் விளக்கினார். சோனா கல்வி நிறுவன தலைவர் மற்றும் துணை தலைவர்களைப் பாராட்டியதோடு இந்த உயரிய முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். மேலும், இந்த திட்டத்தின் வாயிலாக பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்று இன்று தொழில்முனைவோராக உயர்ந்தவர்களுக்கு உதயம் பதிவு சான்றிதழ் வழங்கினார்..

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திருமதி. பிருந்தா தேவி அவர்கள் இதில் பெண்கள் பெருமளவில் பயிற்சி பெற்று சுய தொழில் தொடங்க ஊக்கப்படுத்தினார். சமூக மேம்பாட்டிற்காக சோனா கல்லூரியின் இந்த முன்னெடுப்புக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

சோனா கல்வி குழுமங்களின் தலைவர் திரு. சொ. வள்ளிப்பா ஐயா அவர்கள் சேலம் மாவட்ட மக்கள் இந்த மைய வசதிகளை பயன்படுத்தி கொள்ளுமாறும், நல்ல வருமானம் ஈட்டி வாழ்வில் முன்னேற வேண்டுமாய் வாழ்த்தினார். இந்த தருணத்தில் பயனாளிகள் தொழில் துவங்க சிறு முதலீடு உள்ளிட்ட உதவிகளை செய்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொண்டார்.

இறுதியில் இந்த திட்டத்தின் இணை ஆய்வாளரும், சோனா தொழில்நுட்ப கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் இணை பேராசிரியருமான, முனைவர். திருமதி. கு. சி. ராஜேஸ்வரி அவர்கள் நன்றி உரை ஆற்றினார். நிறைவாக விருந்தினர்கள், மக்கள், அனைவருக்கும் சிறுதானியத்தில் செய்த மதிய உணவு பரிமாரப்பட்டது.

Related Post