NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

Rahul Kadri, Valliappa & Muthiah     ????????????????????????????????????Uyarthiru. Valliappa, Chairman, SCT.

????????????????????????????????????
Thiru.Chocko Valliappa / Vice Chairman /SCT.
????????????????????????????????????
Thiru.Thiyagu Valliappa / Vice Chairman, SCT.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 2015-2016ம் கல்வியாண்டிற்கான இளங்கலை பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கவிழா நடைபெற்றது. கல்லூரியின் துணைத்தலைவர்கள் திரு.சாக்கோ வள்ளியப்பா திரு.தியாகு வள்ளியப்பா முன்னிலையில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி தலைவர் திரு.வள்ளியப்பா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ராகுல் கத்ரி மற்றும் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் டாக்டர்.ஜெயப்பிரகாஷ் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். அப்போது, சோனா கல்லூரியின் சிறப்புகள் குறித்தும் அகில இந்திய அளவில் சோனா கல்லூரி பெற்றுள்ள பெருமைகள் குறித்தும் எடுத்துரைத்ததோடு நேர மேலாண்மை, வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுதல் குறித்தும் பேசினார். இதனைத்தொடர்ந்து, பேராசிரியர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். முன்னதாக கல்லூரியின் முதலாமாண்டு மாணவ மாணவிகள், பெற்றோர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

மாணவ மாணவிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்க சோனா கல்லூரி காத்திருப்பதாகவும், அவற்றை முழுமையாக பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக அவர்கள் உருவாகவேண்டுமென்று கல்லூரி துணைத்தலைவர்கள் திரு.சாக்கோவள்ளியப்பா திரு.தியாகு வள்ளியப்பா ஆகியோர் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் மும்பை தொழில்லதிபர் ராகுல் கத்ரி, சிறந்த தொழில்நுட்பக் கல்வியோடு சூழலை எதிர்கொள்ளும் தனித்திறனையும் மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே இந்த காலகட்டத்தில் நிலைத்து நிற்க முடியும் என்றார். பின்னர் பேசிய எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா, சிறந்த உள் கட்டமைப்பு, நல்ல ஆசிரியர்கள், மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால்தான் அகில இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது என்றார்.
பின்னர் சோனா குழுமத்தின் தலைவர் திரு.வள்ளியப்பா பேசும்பொழுது, வாழ்வின் முக்கியத்தருனமான இந்த காலகட்டத்தில் படிப்பில் முழுக்கவனம் செலுத்தி மாணவர் சிறந்து விளங்க வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கான வழிகாட்டுதல்கள், கல்வி உதவித்தொகை, பிற வசதிகள் அவற்றை பயன்படுத்திக்கொள்வது குறித்து கல்லூரி டீன் டாக்டர்.கருணாகரன் எடுத்துரைத்தார். இன்னிகழ்வின் போது மாணவர்களின் கல்வி செயல்பாடுகளை பெற்றோருக்கு எளிதாக தெரியப்படுத்தும் “சோனா ஸ்மார்ட்போன் செயலி” அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழாவில் அகடமிக் இயக்குனர் டாக்டர்.கெளசிக், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.