NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

மறைந்த குடியரசுத் தலைவர் மேதகு.அப்துல் கலாம் அவர்களுக்கு, சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கலாம் அவர்களின் சிந்தனைகளும், சாதனைகளும், தேசத்திற்கு அவர் ஆற்றிய பணிகளும் நினைவு கூறப்பட்டது.

kalam-homage

குடியரசுத் தலைவராக இருந்த போது சோனா கல்லூரிக்கு வருகைதந்து கலாம் அவர்கள் பேசியதை நினைவுகூர்ந்த மாணவர்கள், அவரது இலட்சியமான இந்தியா 2020” கனவை நினைவாக்க ஒவ்வொருநாளும் அயராது உழைக்கவிருப்பதாக உறுதிபூண்டனர். ஆய்வுப் பணிகளிலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் இந்தியா முன்னோடியாக விளங்கவேண்டும் என்ற அவரது இலட்சியத்தை நினைவாக்க கல்லூரி ஆய்வகங்களில் இன்னும் அதிகமாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவிருப்பதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் சோனா குழுமத்தின் தலைவர், துணைத் தலைவர்கள், முதல்வர், கல்வி இயக்குனர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The Management, Staff and Students of Sona Group of Institutions pay their respect honourable former president Dr….

Posted by sona college on Wednesday, July 29, 2015