கலை விழா – 2017

Date/Time
Date(s) - 27/02/2017
2:30 pm - 5:30 pm

Location
Special Auditorium

Categories


சோனா தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில், சோனா தொழில் நுட்பக் கல்லூரியில் கலை விழா 2017 நிகழ்ச்சிகள் கடந்த 27.02.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது.

சோனா தொழில் நுட்பக் கல்லூரியில், தமிழ் இலக்கியப் புகழ் போற்றும் கலை விழா ஆண்டுதோறும் பெரும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு பட்டிமன்றப் பேச்சாளர் திரு. சிவகுமார் அவர்கள் ‘இளமை, இனிமை, புதுமை’ என்கின்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் சிலம்பம், நாட்டியம் போன்ற தமிழர் கலை நிகழ்சிகள்மாணவர்கள் ஆரவாரத்திற்கு இடையே மிகச் சிறப்பாக நடைபெற்றது. கலை விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் திருமதி. உஷா மற்றும் கல்வி இயக்குனர் திரு. கௌஷிக் அவர்களும் தலைமை வகித்தனர். விழாவில் ஆயிரகணக்கான மாணவ மாணவியர், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள்  கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *