Date/Time
Date(s) - 10/01/2025
2:00 pm - 4:00 pm
Categories
சோனா தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக தமிழர் சமுகம் சங்கமிக்கும் திருநாளாம் பொங்கல் விழா- 2025 நம் கல்லூரியில் மார்கழி 26, ஜனவரி 10, 2025 அன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தமிழ் மன்றத்தின் தலைமை மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர். மா.ரேணுகா அவர்கள் தலைமை தாங்கினார் .
இவ்விழாவில் நம் கல்லூரியின் முதல்வர் மரியாதைக்குரிய முனைவர். செ.ரா.ரா.செந்தில்குமார் ஐயா அவர்களின் தலைமையில் பொங்கலிட்டு அதனை கடவுளுக்கு படைத்தும், வழிபாடு செய்தும் சிறப்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து பானை உடைத்தல், கயிறு இழுத்தல், கோலப் போட்டி என தமிழர் பாரம்பரியமிக்க போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவில் அனைத்து துறை தலைவர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும், மற்றும் அலுவலக பணியாளர்களும் பங்கேற்று மகிழ்ந்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் மா. சுகுமாரன் மற்றும் தமிழ் மன்ற மாணவ மாணவியர் செய்தனர்.