Date/Time
Date(s) - 15/11/2024
10:00 am - 11:45 am
Categories
சோனா தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலை உதயம் 2024 நிகழ்வானது , நவம்பர் 15, 2024 அன்று முதல்வர் முனைவர். செ.ரா.ரா.செந்தில்குமார் அவர்களின் வழிகாட்டுதலோடு நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ் மன்றத்தின் தலைமை மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர். மா.ரேணுகா அவர்கள் தலைமை தாங்கினார். மன்ற ஒருங்கிணைப்பாளர் மா. சுகுமாரன் வரவேற்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் “ தூயதமிழ் பற்றாளர்” திரு.மு.சந்தோஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு “எது நம் அடையாளம்” என்ற தலைப்பில் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார். கலை உதயம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை சிறப்பு விருந்தினர் வழங்கினார். சிறந்த துறைக்கான விருது கணினி அறிவியல் துறைக்கு வழங்கப்பட்டது. மேலும் பரதம், சிலம்பம் மற்றும் குழு நடனம் என பல பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள் இவ்விழாவில் நடைபெற்றன.
இவ்விழாவில் முதலாமாண்டு மாணவர்களும், மன்ற மாணவ உறுப்பினர்களும், ஆசிரிய பெருமக்களும் பங்கேற்றனர்