Author Archives: sonapr

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மேக் இன் இந்தியா கண்காட்சி

11666270_923809211039624_7136976295902259628_n
குறு, சிறு, நடுத்தர தொழில் அமைச்சகம், சார்பில் வருகிற நவம்பர் 6 மற்றும் 7ம் தேதியன்று சேலம், சோனா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் “தொழில் கண்காட்சிநடைபெறவுள்ளது. செயில், பி.எச்.ஈ.எல், என்.எஸ்.ஐ.சி, போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன இரயில்வே, வானூர்தி, பாதுகாப்புத்துறை, வங்கிகள் என்று பல்வேறு துறைகளிலிருந்தும் பெருமளவில் நிறுவனங்கள் பங்குபெறுகின்றன.
தொழில் வளர்ச்சியில் சேலம் முன்னோடியாக திகழ இக்கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும் என்று கண்காட்சியை ஒருங்கினைக்கும் அமைச்சகத்தினர் தெரிவித்துள்ளனர். தேசிய அளவிலான இவ்வகைக் கண்காட்சி, சேலத்தில் நடைபெறுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 5000த்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் இந்நிகழ்விற்கு வருகை புரிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறு, சிறு, நடுத்தரதொழில்களுக்கு, கடனுதவிகள் பெற இக்கண்காட்சி பயனுள்ளதாய் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. “சேலம் மாநகரத்தின் தொழில் வளர்ச்சிக்கு இவ்வகையான கண்காட்சிகள் மிகுந்த பயணளிக்கும் சேலத்தின் வளர்ச்சிக்கு சோனா எப்போதும் உறுதுனையாய் செயல்படும் என்று சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர், முனைவர். ஜெயப்பிரகாஷ் தெரிவித்தார்

சோனா எம்.பி.ஏ மாணவர்கள் சாதனை..!

தேசிய அளவிலான போட்டிகளில் சோனா எம்.பி.ஏ மாணவர்கள் சாதனை

????????????????????????????????????

MBA students – with Vice Chairman Mr.Thyagu Valliappa , Principal Dr.V.Jayaprakash, Vice Principal Dr.Usha, MBA Director Dr.Selvraj

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் எம்.பி.ஏ துறை மாணவர்கள், தேசிய அளவிலான மேலாண்மைத்துறை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பெங்களுரில் சி.ஐ.ஐ கூட்டமைப்பு நடத்திய ‘தொழில்திட்ட’ போட்டிகளில், ஐ.ஐ.ம் போன்ற மத்திய கல்வி நிறுவனங்களுக்கு இணையாக , சோனா கல்லூரி மாணவர்கள் சக்தி கார்த்தி, நவீன், புருஷோத்தமன் மற்றும் அலிஇப்ராஹீம் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். இப்போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகளில் வென்றதன் மூலம் ரூ.10 லட்சத்திற்கும் மேலாக சோனா மாணவர்களின் தொழில்திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாலர்கள் முனைப்போடிருப்பது சிறப்பிற்குறியது. திருச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான மேலாண்மைத்திறன் போட்டியில், சோனா மாணவர்கள் முதலிடம் பெற்று கோப்பையை வென்றுள்ளனர். எம்.பி.ஏ மாணவர்கள் ஹரி, விஜயப்பிரகாஷ், கார்த்திகேயசிவா, விவேகானந்தன், ராதிகா, அபிராமி, நிவேதா, பூர்ணசுதா, அஸ்வின், அலிஇப்ராஹீம், சபரீஷ்ராஜ் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட நேபாள மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளனர்.

இம்மாணவர்களுக்கான பாராட்டு விழா, சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் சிறப்பாக  நடந்தது. அப்போது, மாணவர்களை கல்லூரியின் துணைத்தலைவர் திரு.தியாகுவள்ளியப்பா, முதல்வர். திரு.ஜெயப்பிரகாஷ், துணை முதல்வர் திருமதி.உஷா, துறைத்தலைவர் திரு.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்நிகழ்வில் பேராசிரியர்கள் திரு.இமானுவேல், திரு.சீனிவாசன் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

MBA students – with Vice Chairman Mr.Thyagu Valliappa , Principal Dr.V.Jayaprakash, Vice Principal Dr.Usha, MBA Director Dr.Selvraj

 

‘SONA – SHADES’ Tops the National Biz Competition !

IMG_0389

TEAM SHADES – Naveen K, Purushothaman,Sakthi Karthick, and Ali Ibrahim

The young management students of Sona College of Technology have got national level appreciation for their outstanding business idea. Young Indians, along with confederation of Indian Industry (CII) conducted a national competition, named YuStart, which supports the students launching new business and social impact ventures.

YuStart is conducted as a part of National Entrepreneurship Summit, #GROWTHHACK, organised by young Indians, Bangalore chapter along with CII. MBA student team comprising Sakthi Karthick, Naveen K, Purushothaman and Ali Ibrahim, of Sona College have been chosen as the top 5 Teams among 150 teams competed from all over India. SHADES – the business idea of the team was highly appreciated by investors and got investment offers from various venture capitalists during the idea presentation held in Leela Palace, Bangalore.

During interaction, the student team members said that, the Business INCUBATOR facilities provided by their college moulded them very well and helped them to come out with a distinct business idea. They added that SONA is the institution which has mentors from foreign bodies to help the aspiring young engineering and tech minds to come out with their unique business ideas.

“We have already started the next level of process of initiating the venture. Before we complete our MBA course, SHADES will be Campus Company which will stand out having unique business model in the aspiring young country like India with the support of prospering institution like Sona” – said the energetic students’ team.

IMG_0271 IMG_0273 IMG_0275 IMG_0276

NSS Day’ 2015 !

SONA NSS WING has celebrated NSS DAY at Kandarkulamanickam and Aandipatty village.

IMG_3689  IMG_3840

In this event there are 93 SONA NSAA Volunteers involved themselves in various service works. Activities were corodinated by SONA NSS team along with Maruthi Blood Bank and Sri Shellapa Blood Bank.

They conducted blood group identification camp for village people. This created awarness about blood groups among rural people.

In addition to the blood camp, around 200 trees were distributed to village people for tree plantation and also the fence was laid in front of the school by the volunteers to the protection of the school children.

The villagers thanked the SONA NSS people for their tireless work towards the betterment of the society.

SAM_0082    SAM_0066IMG_3703     IMG_3829

ஆய்வுப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் – சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

MoU

சோனா தொழில்நுட்பக் கல்லூரி, எம்டஸ் டெக்னாலஜிஸ் என்கின்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆய்வுப்பணிகள், பயிற்சிகள், போன்றவற்றில் ஈடுபடுவது அதிகரிக்கும் என்று மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை ஆய்வுத் தலைவர் முனைவர்.சந்திரசேகர் தெரிவித்தார்.

எம்டெஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் திரு.சதீஷ்குமார் மற்றும் திரு.விஜய்ஆனந்த் ஆகியோர் இவ்வொப்பந்தத்தால் மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களின் ஆய்வுப்பணிகள் பெறவிருக்கும் பலன்கள் பற்றி எடுத்துரைத்தனர். “ஆய்வுப் பணிகளில் சோனா மாணவர்கள் முணைப்போடு செயல்படுவது மகிழ்ச்சியளிக்கின்றது. உங்கள் கல்லூரியில் உள்ள 30க்கும் மேற்பட்ட ஆய்வுமையங்களும், பல்வேறு ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது மேலும் சோனா பெர்ட் ஆய்வுமைத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வது பெருமையளிக்கின்றது” என்று எம்டெஸ் நிறுவனத்தின் இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்தார். பின்னர் தொழிற்துறையின் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ளும் திறமைகளைப் பற்றி மாணவர்களிடம் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்விற்கு சோனா கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயப்பிரகாஷ், தலைமை வகித்தார். மின்னியல் மற்றும் மின்னானுவியல் துறைத்தலைவர் திரு.பத்மா மற்றும் பல்வேறு துறைச்சார்ந்த பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

“நம்மை உண்ணுகிறது நம் உணவு” : டெட் எக்ஸ் சோனா காலேஜ்

“நம்மை உண்ணுகிறது நம் உணவு”
சோனா கல்லூரியில் நடந்த டெட் எக்ஸ் நிகழ்ச்சியில் மருத்துவர் சிவராமன் கருத்து.11986550_1067998416598286_2832033368781325256_n 11999006_1067999843264810_3472259069424671933_n

டெட் எக்ஸ் என்ற சர்வதேச புகழ் பெற்ற நிகழ்ச்சி சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது. நான்காவது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை சோனா எம்.பி.ஏ துறை ஒருங்கிணைத்து நடத்தியது. இயற்கை மருத்துவம், யோகா, சினிமா, தொழில் முனைவோர், என்று பல்வேறு துறைசார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆறாம்திணை புத்தக எழுத்தாளர் மற்றும் மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் “பாரம்பரிய உணவு பற்றியும் இயற்கை உணவுப்பழக்க வழக்கங்கள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்”. தற்போது உள்ள உணவு கலாச்சாரத்தால் மனிதர்களின் ஆயுட் காலம் குறைந்து கொண்டே வருகிறது. எனவே ரசாயனம் கலக்கப்படும் உணவுகளை உண்ணாமல் பாரம்பரிய இயற்கை சார்ந்த உணவை எடுத்துக்கொள்வது நமக்கு நல்லது என்று எடுத்துரைத்தார்.

12004908_1067998343264960_6466984285094630449_n 12002965_1067998353264959_2786255256430619329_n 12003388_1067999819931479_340661861205385952_n 12002327_1067998766598251_7551053969343192392_n
இதனை தொடர்ந்து பேசிய யோகா குரு வெற்றிவேந்தன், பல்வேறு நோய்களில் இருந்து விடுபடுவதற்காக இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பயிற்சிகள் மிக அவசியம் என்றும் இன்றைய காலத்தில் ஆரோக்கியமான உடல் நலமும், நல்ல மனம் படைத்தவர்களாகவும் சமுதாயத்தில் விளங்கவேண்டுமென்றால் அவர்களுக்கு யோகா பயிற்சி மிக அவசியமானது என்றார். பின்னர் பேசிய நடிகை ரோகினி, “நடிகர் நடிகைகள் பற்றி பொதுவாக சமூகத்தில் இருக்கும் பிம்பம் மிகைபடுத்தப்பட்டது. நடிகர்களும் சாமானியன் ஒருவனைப்போல் எல்லா உணர்வுகளும் சிக்கல்களையும் உடையவர்கள் தான். நட்சத்திரங்களை மேன்மையாக கருதுவதால் நாம் நம்மை தாழ்வாக ஒருபோதும் நினைத்துவிடக்கூடாது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் நட்சத்திரம் ஆவதற்கான திறமை உள்ளது. அதனை புரிந்துகொண்டு அவரவர் துறையில் மேன்மையடைய வேண்டும்” என்றார்.
இதனை தொடர்ந்து பெண்ணின் முன்னேற்றம் என்ற தலைப்பில், நேச்சுரல்ஸ் சி.இ.ஒ குமரவேல், அப்துல் காலம் கற்றுக்கொடுத்தது என்ன என்பது குறித்து இன்டஸ்இந்த் முதன்மை மேலாளர் சித்தார்த் ஜெயக்குமார், மீடியா வளர்ச்சி குறித்து ராமகிருஷ்ணன், மனிதவள மேலாளர் ககன் நந்தி, சென்னை டர்ன்ஸ் நிறுவனர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பேசினர்.

press
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், தொழில்துறையினர் என பலர் கலந்துகொண்டனர்.

விண்ணை தொட்ட “வீ டெக்” ..!

சோனா குழுமத்தின் ‘வீ டெக்னாலஜிஅமெரிக்காவின் சிறந்த வளரும் நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சோனா தொழில்நுட்பக் கல்லூரியின், நிர்வாக நிறுவனமான ‘வீ டெக்னாஜி’ (மென்பொருள்) நிறுவனம் அமெரிக்காவின் “சிறந்த வளரும் நிறுவனமாக” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ‘பார்சூன் 500’ என்று பார்சூன் இதழ் வெளியிடும் தரவரிசைப் போன்று ஐ.என்.சி 500 பட்டியலில் ‘வீ டெக்னாலஜி’ நிறுவனம் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ளது

.New Picture

VEE TECH FOUNDER CEO THIRU> CHOKO VALLIAPA, VC SONA COLLEGE.

VEE TECH FOUNDER CEO THIRU CHOCKO VALLIAPA – VC SONA COLLEGE.

தமிழகம், கர்நாடகம் போன்ற பல்வேறு மாநிலங்களில் கிளைகளை உடைய வீ டெக்னாலஜி, அமெரிக்காவிலும் தனது செயல்பாடுகளை வெற்றிகரமாக நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. வீடெக்னாலஜி நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி, திரு.சொக்கு வள்ளியப்பா கூறும்போது “அமெரிக்காவில் மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் மிகுந்த வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறோம். அவ்வாய்ப்புகளை நோக்கி முதன்மையான் இடத்தை அடைய செயல்பட்டுவருகிறது. ஐ.என்.சி 500ல் வீ டெக்னாலஜி பெற்ற இடம், அமெரிக்காவில் எங்கள் நிறுவனத்தின் அங்கீகாரத்தை தெளிவுபடுத்துகின்றது” என்றார்.

வீ டெக்னாலஜி தன் மனிதவளத்தை மேம்படுத்திக்கொண்டுள்ள இத்தருணம், சோனாவில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நல்வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

“எந்த உயரத்திற்குப் போனாலும் ஒழுக்கநெறிகளை கடைபிடித்தல் வேண்டும்”

“மாறிவரும் உலகச்சூழலில் வேலைவாய்ப்பின் நிலைத்தன்மை” என்ற தலைப்பில் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினாராக வருகை புரிந்து பேசிய முருக்கப்பா குழுமத்தின் தலைவர், திரு.முருகப்பா அவர்கள் மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை அளித்தார். அப்போது பேசுகையில் “எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் ஒழுக்கநெறிகளை பிறழாது கடைபிடித்தல் வேண்டும்” என்றார்.

இயந்திரமயமான இந்த வாழ்க்கைச் சூழலில், இளைய தலைமுறையினர் தங்களது அன்றாட வேலைகளிற்கு மத்தியிலும், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடப் பழகிக் கொள்ளுதல் வேண்டும் என்று வழியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு சோனா குழுமத்தின் தலைவர், திரு.வள்ளியப்பா தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் திரு.சொக்குவள்ளியப்பா, திரு.தியாகுவள்ளியப்பா, சோனா கல்லூரி முதல்வர் திரு.ஜெயப்பிரகாஷ், சோனா கல்வி இயக்குனர் திரு. கௌசிக்,  தியாகராஜர் பல்தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் திரு.கார்த்திகேயன் மற்றும் ஆயிராத்திற்கும் மேற்பட்ட சோனா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தியாகராஜர் பல்தொழில் நுட்பக் கல்லூரி மாணவ மாணவியர் பங்குபெற்று பயணடைந்தனர்.DSC_0493 DSC_0486 DSC_0492DSC_0485 DSC_0477 DSC_0466 DSC_0468 DSC_0474

வளரும் சக்தி – வள்ளலார் இலக்கியப்போட்டிகள் !

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான வள்ளலார் இலக்கியப்போட்டிகள்.

DSC_0385 DSC_0362இராமலிங்கர் பணிமன்றம் சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, இசைப் போட்டி ஆகியவை சோனா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. மாநில அளவில் நடைபெற்ற “வளரும் சக்தி என்ற இப்போட்டிகள், வள்ளலார் அவர்களின் கருத்துக்களை இளைய தலைமுரையினர், மத்தியில் பரப்பும் வகையில் அமைந்திருந்தது.

DSC_0423 DSC_0416சேலம் மண்டலத்தின் மையமாக சோனா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 500க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விழாவில் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின், துணைத் தலைவர் திரு.தியாகுவள்ளியப்பா, முதல்வர்.ஜெயப்பிரகாஷ், என்.ஜ.ஏ கல்வி நிறுவனங்கள் செயலாளர். ராமசாமி, ஆகியோர் பங்குபெற்று மாணவர்களை வாழ்த்திப்பேசினர். போட்டிகளை இராமலிங்கர் பணிமன்ற ஒருங்கிணைப்பாளர்களோடு, சோனா தமிழ் இலக்கிய மன்ற பொருப்பாளர்கள் இணைந்து நடத்தினர். போட்டியில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சேலம் மண்டல அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறுவர் என்பது குறிப்பிடத்தக்கதுDSC_0425.DSC_0379    DSC_0362 DSC_0368 DSC_0369 DSC_0376

“Desalination process will be a viable solution for water crisis in future.”

DSC_2173

DSC_2185

A one-day “National-level Seminar on Current Trends in Water Quality Management: Local and Global Scenario” was conducted on 21.08.2015 at Sona College of Technology, Salem by the Civil Engineering Department of Sona College of Technology. The objective of this seminar was to create awareness and improve knowledge on recent trends in water quality management among students, engineers and scientists.

A large number of students and faculty members from various engineering colleges, polytechnic colleges and arts and science colleges participated in the seminar. Also scientists and engineers from PWD Groundwater Division and Tamil Nadu Water Supply Drainage Board, Salem participated in the seminar.

Professor and Head of the Civil Engineering Department, Dr. R. Malathy welcomed the participants and highlighted the need for water conservation by every individual in every possible way. The chief guests of the seminar were Mr. P. P. Chandrasekaran, Assistant Director (Lab), Advanced Environmental Laboratory, Tamil Nadu Pollution Control Board, Salem and Mr. Sudhakar Deenadayalan, General Manager, Chemin Enviro System Pvt. Limited, Chennai.

Mr. Chandrasekaran explained the pollution status of water quality of surface water of river Cauvery. Mr. Sudhakar Deenadayalan described the desalination process, especially reverse osmosis, and the methods to dispose reject water. He also visualized that large-scale desalination process will become a viable solution for water crisis in future.

The other presenters were faculty members of Sona College of Technology, Dr. M. Ramesh Kumar of Fashion Technology Department, and Dr. L. Vijay Anand and Professor N. Vetrivel of Civil Engineering Department. Dr. M. Ramesh Kumar described the processes in textile and dyeing industry and industrial wastewater treatment processes. Dr. L. Vijay Anand presented a paper on uranium contamination of soil and groundwater with reference to two sites in the USA.

Professor N. Vetrivel described the concept of groundwater modelling and explained the procedure to be followed in the application of MODFLOW groundwater modelling software. The students showed keen interest on the said topics and interacted with the resource persons.

The proceedings of this seminar have been well received by the students, faculty members, and scientists and engineers from Government Departments.

DSC_2202