NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

“மாறிவரும் உலகச்சூழலில் வேலைவாய்ப்பின் நிலைத்தன்மை” என்ற தலைப்பில் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினாராக வருகை புரிந்து பேசிய முருக்கப்பா குழுமத்தின் தலைவர், திரு.முருகப்பா அவர்கள் மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை அளித்தார். அப்போது பேசுகையில் “எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் ஒழுக்கநெறிகளை பிறழாது கடைபிடித்தல் வேண்டும்” என்றார்.

இயந்திரமயமான இந்த வாழ்க்கைச் சூழலில், இளைய தலைமுறையினர் தங்களது அன்றாட வேலைகளிற்கு மத்தியிலும், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடப் பழகிக் கொள்ளுதல் வேண்டும் என்று வழியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு சோனா குழுமத்தின் தலைவர், திரு.வள்ளியப்பா தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் திரு.சொக்குவள்ளியப்பா, திரு.தியாகுவள்ளியப்பா, சோனா கல்லூரி முதல்வர் திரு.ஜெயப்பிரகாஷ், சோனா கல்வி இயக்குனர் திரு. கௌசிக்,  தியாகராஜர் பல்தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் திரு.கார்த்திகேயன் மற்றும் ஆயிராத்திற்கும் மேற்பட்ட சோனா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தியாகராஜர் பல்தொழில் நுட்பக் கல்லூரி மாணவ மாணவியர் பங்குபெற்று பயணடைந்தனர்.DSC_0493 DSC_0486 DSC_0492DSC_0485 DSC_0477 DSC_0466 DSC_0468 DSC_0474