சோனா குழுமத்தின் ‘வீ டெக்னாலஜி’ அமெரிக்காவின் சிறந்த வளரும் நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சோனா தொழில்நுட்பக் கல்லூரியின், நிர்வாக நிறுவனமான ‘வீ டெக்னாஜி’ (மென்பொருள்) நிறுவனம் அமெரிக்காவின் “சிறந்த வளரும் நிறுவனமாக” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ‘பார்சூன் 500’ என்று பார்சூன் இதழ் வெளியிடும் தரவரிசைப் போன்று ஐ.என்.சி 500 பட்டியலில் ‘வீ டெக்னாலஜி’ நிறுவனம் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ளது
தமிழகம், கர்நாடகம் போன்ற பல்வேறு மாநிலங்களில் கிளைகளை உடைய வீ டெக்னாலஜி, அமெரிக்காவிலும் தனது செயல்பாடுகளை வெற்றிகரமாக நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. வீடெக்னாலஜி நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி, திரு.சொக்கு வள்ளியப்பா கூறும்போது “அமெரிக்காவில் மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் மிகுந்த வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறோம். அவ்வாய்ப்புகளை நோக்கி முதன்மையான் இடத்தை அடைய செயல்பட்டுவருகிறது. ஐ.என்.சி 500ல் வீ டெக்னாலஜி பெற்ற இடம், அமெரிக்காவில் எங்கள் நிறுவனத்தின் அங்கீகாரத்தை தெளிவுபடுத்துகின்றது” என்றார்.
வீ டெக்னாலஜி தன் மனிதவளத்தை மேம்படுத்திக்கொண்டுள்ள இத்தருணம், சோனாவில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நல்வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.