NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

11666270_923809211039624_7136976295902259628_n
குறு, சிறு, நடுத்தர தொழில் அமைச்சகம், சார்பில் வருகிற நவம்பர் 6 மற்றும் 7ம் தேதியன்று சேலம், சோனா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் “தொழில் கண்காட்சிநடைபெறவுள்ளது. செயில், பி.எச்.ஈ.எல், என்.எஸ்.ஐ.சி, போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன இரயில்வே, வானூர்தி, பாதுகாப்புத்துறை, வங்கிகள் என்று பல்வேறு துறைகளிலிருந்தும் பெருமளவில் நிறுவனங்கள் பங்குபெறுகின்றன.
தொழில் வளர்ச்சியில் சேலம் முன்னோடியாக திகழ இக்கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும் என்று கண்காட்சியை ஒருங்கினைக்கும் அமைச்சகத்தினர் தெரிவித்துள்ளனர். தேசிய அளவிலான இவ்வகைக் கண்காட்சி, சேலத்தில் நடைபெறுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 5000த்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் இந்நிகழ்விற்கு வருகை புரிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறு, சிறு, நடுத்தரதொழில்களுக்கு, கடனுதவிகள் பெற இக்கண்காட்சி பயனுள்ளதாய் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. “சேலம் மாநகரத்தின் தொழில் வளர்ச்சிக்கு இவ்வகையான கண்காட்சிகள் மிகுந்த பயணளிக்கும் சேலத்தின் வளர்ச்சிக்கு சோனா எப்போதும் உறுதுனையாய் செயல்படும் என்று சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர், முனைவர். ஜெயப்பிரகாஷ் தெரிவித்தார்