உழவுக்கும் உயிர் உண்டு

nammaalvar

“சார்! வைஸ் சேர்மன் கேட்டாங்க. ஆர்டிக்கல் என்ன ஆச்சு” திரு.செல்லதுரை பார்குறப்பெல்லாம் கேக்குற விஷயம் பிளாக் கண்டன்ட் (Blog Content)

“நாளைக்குத் தர்றேன், ஜீ கண்டிப்பாக” என்று சொல்லிவிட்டு வந்தேன் நேற்று.

அதிகாலை 6 மணி. தினமும் காலையில் புத்தகம் வாசிப்பது வழக்கம்.

சரி. இன்னிக்கு பிளாக் கண்டன்ட் எழுதிடலாம்.

என்ன எழுதலாம்? சட்டென யோசிக்காமல் நினைவிற்கு வந்தது சோனா தளிர்”-யின் மூலமாக நடத்திய “உழவுக்கும் உயிர் உண்டு திரு.நம்மாழ்வார் நிகழ்ச்சி.

சரியாக இரண்டாண்டுகள் ஆகிவிட்டது! ஆனால், இன்னும் நினைவுகளோடு இருக்கிறது அந்த நிகழ்வு. சமூக ஆர்வலர் அன்றைய சோனா-வின் நிர்வாகவியல் மாணவர். விக்னேஷ் மூலமாக அவரது தொலைபேசி எண்னைப் பெற்றேன்.

“சார் நீங்களே பேசுங்க, அய்யாவே பேசுவார்” என்று எண்ணிடம் அவர் தந்த கைபேசி எண்னை தொடர்பு கொள்கிறேன், அந்த மாலை வேலையில்.

மறுபக்கம் உடனே அழைப்பை எடுத்துப்பேசுகிறார், அந்த முதியவர்.

“அய்யா வணக்கம்! நாம் சோனா கல்லூரியில் இருந்து பேசுகிறேன். உங்களைச் சந்திக்க வேண்டும் என்று மாணவர்கள் விரும்புகிறார்கள். நேரம் கிடைக்குமாங்க ஐயா?” என்றேன்.

“தாராலாமா வாங்கய்யா! வானகத்துக்கு வாங்க! எப்பவேணாலும் வாங்க, நாம மேல பேசுவோம், சரிதானா? என்று கணீர் என பதிலளித்தார் அய்யா. நம்மாழ்வார் அவர்கள்.

அப்போது விக்னேஷ், முத்துகுமார், ஜெயமுருகன், சரண்யா, ஜெயா, ஜெகதிஷ் என எல்லோரும் இராண்டாம் ஆண்டு ப்ராஜக்ட் இறுதி நாட்களில் இருந்தார்கள். ஆகையால் கல்லூரியில் அவர்கள் இல்லை. சரி! முதலாம் ஆண்டு மாணவர்களோடு செல்லலாம்.

“போலாம் சார்! நான் கார் எடுத்துட்டு வந்துட்றேன் யார்லாம் வாராங்கான்னு பாத்துட்டு, சரண்யாவையும் கார் எடுத்துட்டு வரச்சொலீடலாம்!”

நெறயபேர் வேணாம்! முதல்ல நாம போவோம், பாத்துட்டு வந்து அப்றமா இன்னொரு விசிட் போய்கலாம் எல்லாரும்.

சரி, சார்! ஞாயத்துக்கிழமை போகலாம்!

ஞாயிறு காலை 4.30 – அலாரம் “அய்யோ” என்று கதறுகிறது. அலட்டிக்கொள்ளமல் எழுந்து கிளம்புகிறேன்

ஏதோ குறுஞ்செய்தி வந்திருக்கிறது, கைபேசியில் சரண்யாவிடமிருந்து, “அண்ணா, நாங்க கிளம்பிட்டோம். கரூர் வர்ரதுக்கு இன்னும் 2 ஹவர்ஸ் ஆகும். நான், தயானந்து, விஜய் வர்றோம்”

ஓகே! சேப் ஆ வாங்க! யார் வண்டி ஓட்றா? தயாண்ந்தா?” (குறுஞ்செய்தி)

“ஓகே! டன்!” (குறுஞ்செய்தி)

நான் ஈரோட்டிலிருந்து கிளம்புகிறேன், அவர்கள் சேலத்திலிருந்து வருகிறார்கள். வானகம், கரூரைத் தாண்டி 20கி.மீ. மணப்பாறை போகும் வழி என்று நினைக்கிறேன், அங்கு அமைந்துள்ளது.

சரண்யா, தயானந்து, விஜய் உடன், கையில் புத்தகமும், கண்களில் ஆர்வமுமாய் கரூரில் இணைந்து கொண்டேன்.

வழி எப்படி போகனும்னு விசாரிக்கலாமா?

“சார் கூகுள் மேப்ஸ் இருக்கு, அப்டியே போகலாம் ஒண்னும் பிரச்சன இல்ல” எங்கிறார் தயாணந்து.

ஐயாவுடைய தேதியைக் கேட்டுட்டு நிகழ்ச்சி எப்படி நடத்துரதுன்னு முடிவு பண்ணிக்கலாம்.

பயணத்தின் போதே, திட்டங்கள் விவாதிக்கப்படுகிறது. ஒரு அமைப்ப உருவாக்கலாம், இயற்கை, சுற்றுச்சூழல், உணவுப் பழக்கம்னு எல்லா பத்தியும் காலேஜ்ல அவார்னஸ் ஏற்படுத்தனும். (தளிர்)

ஆமாம் சார், ஆமோதிக்கிறார்கள் அனைவரும். சார்! ஏதாவது சொல்லுங்கள் அதைப்பற்றி! கேட்டுக்கிட்டே வர்றோம்! என்கிறார் தயானந்து.

என்ன்ன்னு குறிப்பா கேளுப்பா! சொல்றேன், எங்கிறேன் நான்.

இல்ல சார், இயற்கை விவசாயம், சிறுதாணிய உணவு, மாறிவரும் உணவுப் பழக்கம்னு நஞ்சாகும் உணவு பற்றி சொல்லுங்க.

கையில், “உழவுக்கு உண்டு வரலாறு” புத்தகம், சமிபத்தில் அதைத் தான் படித்துக் கொண்டிருக்கிறேன். நம்மாழ்வார் எழுதியது.

சரி, இதுல படிச்சதச் சொல்றேன், நீங்களும் சேர் பண்ணுங்க

அப்போது கார், பாதி தூரத்தைக் கடந்திருந்த்து. இன்னும் ஒரு மணி நேரம் ஆகாலம் “வானகம்” சென்றடைய. பேசத் தொடங்கினேன்.

….

ஆதி மனிதன் வேட்டையாடித்தான் வாழ்க்கை நடத்தினான் அதுகப்புறம்தான் விவசாயம் கண்டுபுடிச்சோம் நாம். விவசாயத்தைக் கண்டுபுடிச்சது நிச்சயமாகப் பெண்கள்தான்னு சொல்றாங்க. அப்போ நாம தாய் வழிச் சமூகமாகத்தான் இருந்தோம். அதனாலதான் நிலத்தோட நாம செய்யிற சடங்குகள் எல்லாம், பெண் சடங்குகள் பாவனையிலேயே இருக்கும். நிலத்தோடு பெண் நிறைய தொடர்புடைவளா இருக்கா. நிலம், நீர் எல்லாம் அதனாலதான் பெண் பெயராளேயே குறிப்பிடப்படுது.

அந்த காலகட்டத்தில்தான் பெண் சமூக தலைமையேற்றிருந்தாள். பின்பு, போர், சண்டையெல்லாம் குழுக்களுக்குள் நடக்கத் தொடங்கிய அப்புறம்தான், பெண்ணுக்கும் மண்ணுக்கும் இருந்த உறவு பின் தள்ளப்பட்டது.

ஆனா இன்னிக்கு யோசிச்சுப் பார்த்த, மனுசனுக்கும் மண்ணுக்குமே தொடர்பு இல்லாம  போயிட்டிருக்குனு உங்களுக்குத் தெரியலயா?

எப்படி சார்? என்றார் தயான்ந்து

ஆதிமனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்திட்டுடிருந்தான். இயற்கையில நாம ஒரு அங்கம்னு தெரிஞ்சு இயற்கைய மாசுபடுத்தாம வாழ்ந்தான். ஆனா நாம என்ன செய்றோம் இப்ப? விவசாயமா இருந்தாலும் சரி, அன்றாட வாழ்க்கை முறையா இருந்தாலும் சரி, சுற்றுச்சூழல், இயற்கைவளம், எல்லாத்தையும் அழிச்சுத்தான வாழப்பழகிட்டோம்

யோசிச்சுப் பாருங்க! இயற்கையா கிடைக்கிர உரம் இருக்கும் போது ரசாயணத்தப் பயன்படுத்துகிறோம். அடி காட்டுல, நடு மாட்டுல, நுனி வீட்டுல அப்டின்னு ஒரு சொலவம் இருக்கு.

…..

ட்ரைன் டைம் ஆச்சு, இன்னும் என்ன செய்ற; சாப்டாம?

அம்மா காலை உணவு சாப்பிட கூப்டுராங்க

சரி மிச்சத்த அடுத்த கட்டுரைல சொல்றேன்.

இனி அத்தனையையும் திரு.சுப்ரமணி டைப் வேற பண்னனும், அப்பொத்தான் திரு.செல்லதுரைக்கு கட்டுரைய blog-ல போட அனுப்ப முடியும்.

….

தளிர் மீண்டும் துளிரும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *