NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

MoU

சோனா தொழில்நுட்பக் கல்லூரி, எம்டஸ் டெக்னாலஜிஸ் என்கின்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆய்வுப்பணிகள், பயிற்சிகள், போன்றவற்றில் ஈடுபடுவது அதிகரிக்கும் என்று மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை ஆய்வுத் தலைவர் முனைவர்.சந்திரசேகர் தெரிவித்தார்.

எம்டெஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் திரு.சதீஷ்குமார் மற்றும் திரு.விஜய்ஆனந்த் ஆகியோர் இவ்வொப்பந்தத்தால் மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களின் ஆய்வுப்பணிகள் பெறவிருக்கும் பலன்கள் பற்றி எடுத்துரைத்தனர். “ஆய்வுப் பணிகளில் சோனா மாணவர்கள் முணைப்போடு செயல்படுவது மகிழ்ச்சியளிக்கின்றது. உங்கள் கல்லூரியில் உள்ள 30க்கும் மேற்பட்ட ஆய்வுமையங்களும், பல்வேறு ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது மேலும் சோனா பெர்ட் ஆய்வுமைத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வது பெருமையளிக்கின்றது” என்று எம்டெஸ் நிறுவனத்தின் இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்தார். பின்னர் தொழிற்துறையின் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ளும் திறமைகளைப் பற்றி மாணவர்களிடம் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்விற்கு சோனா கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயப்பிரகாஷ், தலைமை வகித்தார். மின்னியல் மற்றும் மின்னானுவியல் துறைத்தலைவர் திரு.பத்மா மற்றும் பல்வேறு துறைச்சார்ந்த பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.