NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

பருவ நிலை மாற்றம், இயற்கை வளம் அழிவு, என்று நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமும், சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் ‘உலக சுற்றுச்சூழல் தினம்’ கொண்டாடப்பட்டது. நிகழ்வினில் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு பேசிய உகாண்டா அமைச்சர் மதிற்பிற்குரிய ரோசாலின் அவர்கள், “ சோனா கல்லூரியில்  அமைத்திருக்கும் சர்வதேச கிரிகா விருது பெற்ற பசுமை கட்டிடத்தை பார்வையிட்டார். கல்லூரியின் பசுமை வளாக நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டிய அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக கல்லூரியில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

world environment day
world environment day

பின்னர் பேசிய சோனா கல்லூரியின் தலைவர் திரு.வள்ளியப்பா, அவர்கள் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற புற நடவடிக்கைகள் மட்டுமல்லாது, தனிமனித மேம்பாட்டினை வலுப்படுத்தும் யோகாவையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் தங்கள் கல்லூரி வழங்கிவருவதாகத் தெரிவித்தார்” கல்லூரி முதல்வர்.திரு ஜெயப்பிரகாஷ் அவர்கள் “வருகிற 21 ஜீன் அன்று சர்வதேச யோகா தினத்தை “கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாட இருப்பதாகத் தெரிவித்தார்.

“கல்லூரியில் எடுக்கப்படும் பசுமை முயற்சிகள் அனைத்தும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும், இயற்கையைப் பேணும் எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்” என்று துணைத்தலைவர் திரு. சொக்கு வள்ளியப்பா தெரிவித்தார்.

“சர்வதேச அங்கீகாரமான கிரிகா விருதினைப் பெற்ற பசுமைக் கட்டிடம் போன்ற, பல்வேறு கட்டிடங்களை கல்லூரி வளாகத்தில் உருவாக்கி வருகிறோம். கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இக்கட்டிடங்கள், சுற்றுச்சூழல் சம்மந்தமான விழிப்புணர்வு எண்ணங்களை தினம்தோறும் ஏற்படுத்தி வருகிறது” என்றார் கல்லூரியின் துணைத்தலைவர் திரு.தியாகு வள்ளியப்பா அவர்கள்.

நிகழ்வின் போது உகாண்டா அமைச்சர் ரோசாலின் அவர்கள், கல்லூரித்தலைவர் திரு.வள்ளியப்பா, துணைத்தலைவர்கள் திரு.சொக்குவள்ளியப்பா, மற்றும் திரு.தியாகு வள்ளியப்பா, கல்லூரி முதல்வர் திரு.ஜெயப்பிரகாஷ், மற்றும் மாணவ மாணவிகள், உடனிருந்தனர்.